தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நோட்டாவிற்கும் கீழ் சென்ற தேமுதிக... கட்சியின் எதிர்காலம் என்ன? - 2021 nota votes

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளே தேமுதிகவுக்கு கிடைத்துள்ளது கட்சி தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

DMDK
தேமுதிக

By

Published : May 7, 2021, 4:32 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, நோட்டாவிற்கு கீழ் தான் வாக்குகளை பெற்றுள்ளது. 2011இல் எதிர்கட்சியாக இருந்த தேமுதிக, நோட்டாவிற்கு கீழ் சென்றது தேமுதிக தொண்டர்களை கடும் சோர்வடைய செய்துள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் அமமுக, எஸ்டிபிஐ, ஓவைசி கட்சி உடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ,நின்ற அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றிபெற்ற விருத்தாசலம் தொகுதியில் , தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளார்.

60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக சராசரியாக ஒரு தொகுதிக்கு 3,335 வாக்குகளை மட்டுமே பெற்று உள்ளது.

வீழ்ச்சி எங்கே?

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 4 இடங்களில் போட்டியிட்டது, இதில் ஒரு இடத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. 1.78% விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக பலகட்ட பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தியது, பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், தேமுதிகவும் அதே எண்ணிக்கையிலான அல்லது கூடுதலான தொகுதிகளை எதிர்பார்த்தது, ஆனால் அதிமுக 11 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்ததால் தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியது.

நோட்டாவிற்கும் கீழ் சென்ற தேமுதிக

தேமுதிக தலைவர் உடல்நலம் குன்றியுள்ளதால், பரப்புரைக்கு விஜயகாந்த் வர வாய்ப்பில்லை என்பதை அறிந்து குறைவான இடங்களே ஒதுக்க முன்வந்தது.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தோல்வி

2005இல் கட்சி தொடங்கிய விஜயகாந்த் 2006இல் தனித்து நின்று 8.4 விழுக்காடு வாக்குகளை பெற்றார். தொடர்ந்து 2009இல் 39 தொகுதியில் தனித்து நின்று 10.3 விழுக்காடு ஓட்டுகளை பெற்று தேமுதிக 3ஆவது பெரிய கட்சியாக மாநில அஸ்தஸ்து பெற்றது.

2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 41 இடங்களில் 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சியாக சட்டபேரவையில் இடம்பிடித்தது. தொடர்ந்து, 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, மதிமுக, பாமக உடன் கூட்டணி அமைத்து 14 தொகுதியில் போட்டியிட்டு 5 விழுக்காடு வாக்குகளை பெற்றது. 2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக உடன் கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் நல கூட்டணியில் 105 இடங்கள் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை, 2.2 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

கூட்டணி அணுகுமுறை:

தேமுதிக தலைவர் உடல்நலம் குன்றிய நிலையில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தேமுதிக பொருளாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. தவறான அணுகுமுறை, களத்தில் போதிய அளவில் மக்கள் நல பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காதது, விஜயகாந்த் இல்லாத களம் உள்ளிட்ட காரணங்களால் நோட்டாவை விட தேமுதிக பின்னுக்கு சென்றுள்ளது.

2021 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக - அமமுக கூட்டணி

இதனால், மாநில அஸ்தஸ்து ரத்தாவது மட்டுமின்றி, முரசு சின்னத்தை இழக்ககூடிய சூழல் உருவாகியுள்ளது.

தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்திலும், கட்சியை மீண்டும் பழையபடி வளர்த்து எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தேமுதிக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details