தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு நாளை முதல் விநியோகம்’ - விஜயகாந்த் - dmdk local body election petition

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறுவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

DMDK Vijayakanth Press Release about local body election

By

Published : Nov 14, 2019, 7:35 PM IST

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், தேமுதிகவின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் தங்களின் விருப்ப மனுக்களை நாளை காலை 10 மணியிலிருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை நவ. 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் மட்டுமே தகுதியானவர்கள்.

கட்டணத் தொகை பின்வருமாறு:

  • மாநகராட்சி மேயர் - ரூ. 15,000
  • மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் - ரூ.4,000
  • நகராட்சி மன்ற தலைவர் - ரூ. 7,000
  • நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - ரூ.1,500
  • பேரூராட்சி மன்ற தலைவர் - ரூ.4,000
  • பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - ரூ.1,000
  • மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - ரூ.4,000
  • ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் - ரூ.2,000

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details