தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்த ஆறாவது வார்டு கவுன்சிலர் பாக்கியம் என்பவரது கணவர் கண்ணன் தேமுதிக கட்சியின் அடிப்படை உறுப்பினர், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுகவிற்கு ஆதரவளித்த தேமுதிக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் - விஜயகாந்த் அறிக்கை! - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை
சென்னை: பெரியகுளம் ஒன்றியத் தலைவர் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்த தேமுதிக கவுன்சிலரின் கணவர் கண்ணன் தேமுதிக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
![திமுகவிற்கு ஆதரவளித்த தேமுதிக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் - விஜயகாந்த் அறிக்கை! DMDK Statement](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10638465-908-10638465-1613396331090.jpg)
DMDK Statement
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேனி மாவட்டம், பெரியகுளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.சி கண்ணன் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர் கழக பதவி, கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இன்று(பிப்.15) முதல் நீக்கப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வருகிற 25ஆம் தேதி கோவை பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பு