இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து ஊதியக் குழுக்களிலும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஒரே அடிப்படையில்தான் மாநில அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
இருப்பினும், மத்திய அரசு மருத்துவர்கள் நான்கு ஆண்டுகளில் பெரும் ஊதிய உயர்வினை மாநில அரசு மருத்துவர்கள் பெற 15 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த ஏற்றத் தாழ்வுகளைக் கண்டித்தும், ஊதிய உயர்வை வழங்கக் கோரியும் அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தமிழ்நாடு அரசு, மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தது. ஆனால் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கரோனா பேரிடர் காலத்தில் கால வரம்பின்றி பணியாற்றிய மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய முறை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழக்கு: நகராட்சி நிர்வாகத்துறை செயலருக்கு உத்தரவு