சென்னை:கோயம்பேடு ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் மெயின் கேட் அருகே தேமுதிக கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் பேனர் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை தண்ணீர் பந்தல் மற்றும் பேனர் கொளுந்துவிட்டு எரிவதாக பொதுமக்கள் கோயம்பேடு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் முழுவதுமாக எரிந்தது. நள்ளிரவு என்பதால் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.