சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் தையல் கடை நடத்தி வருபவர் ராஜ்குமார் (36). இவர் தேமுதிக இளைஞர் அணி நகர துணை செயலாளராக உள்ளார். நேற்று (மார்ச்1) இரவு வழக்கம் போல், ராஜ்குமார் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே அவரது இருசக்கர வாகனத்தை இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜ்குமாரின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜ்குமாரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.