தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்: தேமுதிக அறிவிப்பு - கேப்டன் விஜயகாந்த்

சென்னை: விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக தேமுதிக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

By

Published : Sep 24, 2020, 9:49 AM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கரோனா பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) மாலை சென்னை மணப்பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக கேவிஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு லேசான கரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும் உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் இருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த விஜயகாந்த் செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த தேமுதிகவின் 16ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றார்.

ABOUT THE AUTHOR

...view details