சென்னை: விஜயகாந்தின் உடல் நிலை தொடர்பாக தேமுதிக தலைமைக்கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் உள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல் அகற்றம் - தொண்டர்கள் அதிர்ச்சி!
நீரிழிவு பிரச்னை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் அகற்றப்பட்டதாக தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது.
கேப்டன் விஜயகாந்த்
மேலும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும்; அவரது உடல் நலன் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக தொண்டர்கள் நம்ப வேண்டாம்' என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘யோகா சமூகத்திற்கு அமைதியை கொண்டு வரும்’- பிரதமர் மோடி