முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான எழுவரில் ஒருவரான பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக-வின் தலைவர் விஜயகாந்த் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். தனது பாதி காலத்தை சிறையிலேயே அவர் அனுபவித்து விட்ட நிலையில் பேரறிவாளனின் விடுதலை அவரது தாயார் அற்புதம்மாளின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, அற்புதம்மாளின் விடா முயற்சியால் இன்று தனது மகனை மீட்டெடுத்துள்ளார்.