தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (மே.19) அதிகாலை 3 மணியளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தேமுதிக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - தேமுதிக தலைமைக் கழகம் - DMDK founder vijaykanth
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக, தேமுதிக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விஜயகாந்த்
இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தேமுதிக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
Last Updated : May 19, 2021, 10:27 AM IST