தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13ஆம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் - தேசிய முற்போக்கு திராவிட கழகம்

நாளை மறுநாள் தேமுதிக மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

dmdk-dist-sec-meeting-announced
dmdk-dist-sec-meeting-announced

By

Published : Dec 11, 2020, 3:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதையடுத்து, அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு, கூட்டணி விவகாரம், கட்சித் தொடக்கம் என தமிழ்நாட்டின் அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது.

இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோனை கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் நாளை மறுநாள் (டிச. 13) ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜயகாந்தால் செய்யமுடியாததை ரஜினியால் செய்ய முடியுமா? - ஒருவிரல் புரட்சி ஆன்மிக ஆட்சிக்கு வித்திடுமா?

ABOUT THE AUTHOR

...view details