தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஈரோட்டில் அமைச்சர்கள் முகாமிட்டு பணப்பட்டுவாடா செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது" - பிரேமலதா - இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும்

ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக அமோக வெற்றி பெறும் என்றும், தமிழக அமைச்சர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் முகாமிட்டு பணப்பட்டு வாடா செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

che
che

By

Published : Feb 12, 2023, 5:14 PM IST

சென்னை: தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கொடி நாளையொட்டி இன்று(பிப்.12) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். ஈரோடு இடைத்தேர்தலில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு பணப்பட்டு வாடா செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், நடிகராக இருந்தது முதலே ஈரோடு மாவட்டத்தில் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் என்றும், அதனால் ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ’தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தே, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் தங்க பேனாவை பரிசாக கொடுத்துள்ளார், அந்த அளவுக்கு கருணாநிதியின் மேல் விஜயகாந்த்துக்கு பெரிய மதிப்பு உண்டு’ என்று குறிப்பிட்ட அவர், ’அதேநேரம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கடலில் 83 அடி பேனா சிலை எதற்கு?’ என்றும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், அதில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பின்னர் பேசலாம் என்றும் தெரிவித்தார். முன்னதாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய சி.பி. ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details