சென்னை:ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி திமுக அமைச்சர்கள், பொதுமக்களிடம் நேரடியாக பண பட்டுவாடா செய்வதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள் இன்று (பிப்.4) புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அமைச்சர்கள் நேரடியாக பண பட்டுவாடா செய்வதாக தேமுதிக வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடு தொடர்பாக தேமுதிக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய ஜனார்த்தனன், தேமுதிக மாநில வழக்கறிஞர் துணை செயலாளர், தற்போது நடக்க உள்ள ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவது குறித்து தமிழ்நாடு தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பண பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. மேலும், அமைச்சர்கள் முகாம் அங்கு இட்டு உள்ளனர்.