திருச்சி: மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இந்தி கட்டாயமாக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க அரசு ஈடுபட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை தமிழ்நாட்டில் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்த்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திராவிட மாணவர் கழகம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே இந்தி திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவரனி செயலாளர் அறிவுச்சுடர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.க தலைமை கழக சொற்பொழிவாளர் பூவை.புலிகேசி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.