தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த சனிக்கிழமை முதல் மூன்று நாள்கள் தொடர் விடுமுறையை அரசு அறிவித்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுவிற்பனை படுஜோராக நடைபெற்றது.
இதன் விற்பனை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அக். 25ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ரூ.100 கோடிக்கும் அக்.26ஆம் தேதி சனிக்கிழமை ரூ.183 கோடிக்கும் தீபாவளியன்று ரூ.172 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.