தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் -தென்னக ரயில்வே அறிவிப்பு! - diwali special trains announced by Southern Railway

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

diwali special trains announced by Southern Railway

By

Published : Oct 24, 2019, 9:02 PM IST

தீபாவளி பண்டிகையை மக்கள் தங்களது சொந்து ஊர்களுக்குச் சென்று கொண்டாட வசதியாக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 26 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் சென்றடையும். இதற்கான முன்பதிவு நாளை (25.10.2019) காலை எட்டு மணிக்கு தொடங்குகிறது.

எதிர் மார்க்கத்தில், 25 ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் அதற்கு அடுத்த நாள் காலை 10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்தடையும்.

மேலும், 25 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் சுவைதா சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலூவா, எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக 26 ஆம் தேதி அதிகாலை ஏர்ணாகுளம் சென்றடையும்.

எதிர் மார்க்கத்தில், 24 ஆம் தேதி இரவு 7:40 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் அதற்கு அடுத்த நாள் காலை 10:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details