தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கிய தமிழக அரசு! - சென்னை

சென்னை: தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

diwali-crackers-burst-time-announce

By

Published : Oct 24, 2019, 9:24 AM IST

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்புமாகும். பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  • குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  • மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளலாம்.
  • பொது மக்கள் அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
  • மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க:

'தீபாவளி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு; புக் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம்'

ABOUT THE AUTHOR

...view details