தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புற்றுநோயை காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது - நீதிமன்றத்தில் மனுதாரர் வாதம் - கிருஷ்ணகிரி

சென்னை: புற்றுநோயைக் காரணம் காட்டி பாதிக்கப்பட்டவரிடம் இருந்து விவாகரத்து கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

Divorce case

By

Published : Aug 20, 2019, 5:43 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமால், அம்பிகா தம்பதிக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே அம்பிகா வாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அம்பிகாவுக்கு தாடை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவ்வாறு புற்றுநோய் இருப்பதால், தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாக கூறி கணவர் திருமால் ஊத்தகரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவருக்கும் விவகாரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட அம்பிகா, கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த விவகாரத்து உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து அம்பிகாவின் கணவர் திருமால் விவாகரத்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அம்பிகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுப்பிரமணியம், 2011-ஆம் ஆண்டு புற்று நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தாலும் அம்பிகா தற்போது உடல் நலத்துடன்தான் இருந்துவருகிறார். இந்து திருமண சட்டத்தின்படி தொழுநோய், தாம்பத்திய உறவினால் ஏற்படும் ஹெச்ஐவி போன்ற தொற்றுநோய் இருந்தால் மட்டுமே விவகாரத்து கோர முடியும். புற்றுநோயை காரணம்காட்டி விவகாரத்து கோர முடியாது என்று வாதிட்டார்.

மேலும், தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் புற்றுநோய் பரவாது என்றும், புற்றுநோயை காரணம்காட்டி விவாகரத்து அளிக்கப்பட்டால், இதனை பின்பற்றி பலரும் விவகாரத்து கோர வழிவகை செய்யும் என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து, அம்பிகா தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details