சென்னை:தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்றக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இளங்கலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வினை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு நடத்தி வருகிறது.
விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. நடப்பாண்டில் 431 கல்லூரிகளில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் சிறப்புப்பிரிவினருக்கு 20,21ஆம் தேதி கலந்தாய்வும், சிறப்புப் பிரிவினருக்கு 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 21ஆம் தேதி வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுப்பிரிவுக் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கல்வியாளர் நெடுஞ்செழியன் பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்து கூறும்போது,”பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்கெனவே ஒற்றைச்சாளர முறையில் நேரடியாக கலந்தாய்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. ஆனால், தற்பொழுது தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் இடங்களைத்தேர்வு செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது.