தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் பாதிப்பு விபரம்! - District wise coronavirus outbreak in Tamil Nadu

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விபரம் குறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

District wise coronavirus outbreak in Tamil Nadu
District wise coronavirus outbreak in Tamil Nadu

By

Published : May 1, 2020, 8:49 PM IST

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கையில், ' தமிழ்நாட்டில் உள்ள 34 அரசு பரிசோதனை மையங்கள், 12 தனியார் பரிசோதனை மையங்களில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 363 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், தற்போது வரை 2 ஆயிரத்து 526 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 24 ஆயிரத்து 852 பேருக்கு நோய் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் ஆயிரத்து 985 நபர்களின் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதுமட்டுமின்றி 9 ஆயிரத்து 280 பேருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த ஆயிரத்து 312 பேர் பூரண குணமடைந்து, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 183 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று 9 ஆயிரத்து 365 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதா என்று பரிசோதித்ததில், 203 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 33 ஆயிரத்து 184 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 40 பேர் அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை 28 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் இன்று 92 வயது முதியவர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளார். சென்னை மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட 176 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் பாதிப்பு விபரம்...!

  • சென்னை : 1082
  • கோயம்புத்தூர் : 141
  • திருப்பூர் : 112
  • மதுரை : 87
  • செங்கல்பட்டு : 86
  • திண்டுக்கல் : 81
  • ஈரோடு : 70
  • திருநெல்வேலி : 63
  • நாமக்கல் : 61
  • திருவள்ளூர் : 61
  • தஞ்சாவூர் : 57
  • திருச்சிராப்பள்ளி : 51
  • விழுப்புரம் : 51
  • நாகப்பட்டினம் : 45
  • தேனி : 43
  • கரூர் : 43
  • ராணிப்பேட்டை : 40
  • தென்காசி : 38
  • விருதுநகர் : 32
  • சேலம் : 32
  • திருவாரூர் : 29
  • தூத்துக்குடி : 27
  • கடலூர் : 28
  • காஞ்சிபுரம் : 28
  • வேலூர் : 22
  • திருப்பத்தூர் : 18
  • ராமநாதபுரம் : 18
  • கன்னியாகுமரி : 16
  • திருவண்ணாமலை : 16
  • சிவகங்கை : 12
  • நீலகிரி : 9
  • கள்ளக்குறிச்சி : 9
  • பெரம்பலூர் : 9
  • அரியலூர் : 8
  • புதுக்கோட்டை : 1
  • தருமபுரி : ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க...அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி.!

ABOUT THE AUTHOR

...view details