தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் கள ஆய்வு: மாவட்ட அதிகாரிகள் அதிரடி மாற்றம்! - MK Stalin news

கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வில் சரியாக செயல்படவில்லை எனக் கண்டறியப்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் கள ஆய்வு: மாவட்ட அதிகாரிகள் அதிரடி மாற்றம்
முதலமைச்சர் கள ஆய்வு: மாவட்ட அதிகாரிகள் அதிரடி மாற்றம்

By

Published : Apr 30, 2023, 4:48 PM IST

Updated : Apr 30, 2023, 5:52 PM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கள ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அப்போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஏற்கனவே நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில், நான் ஆய்வு செய்த தகவல்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றுகூறி, அதற்கு ஏற்ப பணிகளை முடுக்கிவிட்டு உள்ளீர்கள்.

அதுபோன்று செய்யாமல், அனைத்துப் பணிகளும் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும்” என மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், இந்த மாவட்டங்களில் பணிகள் நன்றாக நடைபெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, கள்ளக்குறிச்சி மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலரைக் காத்திருப்புப் பட்டியலில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வரும் சரஸ்வதி பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். ஆனால், சரஸ்வதிக்கு வேறு எதுவும் பணிகள் வழங்கப்படவில்லை. இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், “தமிழ்நாடு அரசின் மூலமாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் சில பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது. இந்தப் பணியிட மாற்றம் அனைத்துமே விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்விற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்றமாக அறிய வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக எஸ்.செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ம.ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வில் சரியாக செயல்படவில்லை என கண்டறியப்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக கோ.கிருஷ்ணபிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல திட்டப் பணிகளை நடத்த விடாமல் தடையாக உள்ள உள்ளாட்சித் துறை அலுவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:MK Stalin: விழுப்புரத்தில் கள ஆய்வில் ஈடுபட்ட முதலமைச்சர்.. ஐடி பார்க் முதல் அரிசி ஆலை வரை முக்கிய ஹைலைட்ஸ்!

Last Updated : Apr 30, 2023, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details