தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - அமைச்சர் அறிவுறுத்தல் - சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சி.வி. கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் சி.வி.கணேசன்
அமைச்சர் சி.வி.கணேசன்

By

Published : Sep 24, 2021, 6:43 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விதிமுறைகளை மீறி இயக்கும் பட்டாசு ஆலைகளைக் கண்காணிக்க வேண்டும். பட்டாசுகளில் ஆபத்தில்லா ரசாயனங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகள் மீறி இயங்கும் ஆலைகளுக்கு சீல் வைக்க வேண்டும்"என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அரசு மீது பொய் கருத்துகளை பரப்பும் எடப்பாடி - தங்கம் தென்னரசு

ABOUT THE AUTHOR

...view details