இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 6ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் http://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் தொடங்கி வைத்தார்.
அதன் மூலம் தனியார் வேலைவாய்ப்பு பெறவேண்டி வேலை தேடுபவர்கள், வேலையளிப்போர் http://www.tnprivatejobs.tn.gov.in/ இணையம் வாயிலாக பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம். தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இவ்விணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களின் கல்வித்தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார்த்துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர, பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப் பணியிடங்களை இவ்விணையதளத்தில் பதிவு ஏற்றம் செய்திடவும், அக்காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்வதற்கும் இவ்விணையதளம் வழிவகை செய்யும்.