சென்னை தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிதல், அந்த வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை உயர் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் இன்று (மார்ச் 4) ஆலோசனை நடத்தினார்.
தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடையாறு துணை ஆணையர் விக்ரமன், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.