சென்னை: ரெம்டெசிவிர் மருந்துக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று(மே.21) முதல் விநியோகம் செய்யபடும் என கூறப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள், அதில் ஆக்ஸிஜன் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை அளித்து, tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.