ஈரோடு: மாவட்டத்தில் கரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.
மேலும் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கை கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவை குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.