நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கரோனா ஊடரங்கு காரணமாக வாழ்வாதாரம், வருமானத்தை இழந்துள்ள மக்களுக்கு வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள், உணவு ஆகியவை வழங்கப்பட்டது.