சென்னை : தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 4ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பில், குடும்ப அட்டை ஒன்றுக்கு, பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், ரவா ஒரு கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு 500 கிராம், கரும்பு, துணிப்பை உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.