சென்னை:தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பாலில் உள்ள கொழுப்புச் சத்தின் அடிப்படையில் பாக்கெட்டுகளின் நிறம் நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், பச்சை பால் பாக்கெட்டுகளில் உள்ள பால் 4.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பாலாகும். இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்த பச்சை பால் பாக்கெட்டுகளில் விநியோகம் குறைந்துள்ளது.
சென்னையில் மட்டும் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் நேரடி ஆவின் பாலகங்கள் மற்றும் பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் விநியோகமானது 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறுகையில், "தினசரி இரவு தூங்கி, அதிகாலையில் பால் விநியோகத்திற்காக எழும் போதே இன்று ஆவின் பால் பாக்கெட்டுகள் எவ்வளவு வருமோ?, எவ்வளவு பற்றாக்குறையாக தருவார்களோ? பச்சை நிற பால் பாக்கெட் வருமா? வராதா? சில்லரை வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்ன பதில் சொல்வது? பற்றாக்குறையான பால் பாக்கெட்டுகள் விநியோகத்தை எப்படி சமாளிப்பது? என்கிற மன உளைச்சலுடனேயே பால் முகவர்களின் பணி தொடங்குகிறது.
இதையும் படிங்க: கடந்த 500 நாட்களாக விலையில் மாற்றமின்றி பயணிக்கும் பெட்ரோல், டீசல் - காரணம் என்ன?