வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் துணை பதிவாளர் குருபாதம் மீது கடந்த 2008ஆம் ஆண்டு சிபிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு: துணை பதிவாளருக்கு கடுங்காவல் சிறை
புதுச்சேரி: சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட துணை பதிவாளருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில், 1996 முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான தனது பதவிகாலத்தில் குருபாதம் மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் 34 லட்சத்து 50 ஆயிரத்து 826 ரூபாய்க்கான சொத்துக்கள் வாங்கியிருந்தது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி. தனபால், குற்றவாளி குருபாதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஒரு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், 50 லட்சம் மதிப்புள்ள குருபாதத்தின் கணக்கில் வராத சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.