தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எதிரான தேர்தல் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

சென்னை: திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எதிரான தேர்தல் வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எதிரான தேர்தல் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு
தமிழச்சி தங்கபாண்டியனுக்கு எதிரான தேர்தல் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு

By

Published : Mar 13, 2021, 5:54 PM IST

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரையே வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும்.

ஆனால், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தனது வேட்புமனுவில், சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது வேட்புமனுவை தேர்தல் அலுவலர் ஏற்றிருக்க கூடாது என திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மேலும் அந்த மனுவில் தமிழச்சி தங்கபாண்டியன் என்பதை, சுமதி என மாற்ற வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் முடிந்த 45 நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கோயிலில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் பணி வழங்கும் விவகாரம்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

ABOUT THE AUTHOR

...view details