தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற தனியார் பால் நிறுவனங்களுக்கு அனுமதி! - வழக்கை வாபஸ் பெற பால் நிறுவனங்களுக்கு அனுமதி

தரமற்ற பால் விற்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய விவகாரத்தில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதால், தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

disposed
disposed

By

Published : Dec 12, 2022, 6:21 PM IST

சென்னை: தனியார் பால் நிறுவனங்களில் பாலின் தரம் குறைந்துள்ளதாகவும், அதைக் குடிக்கும் போது மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்திருந்தார்.

இதையடுத்து தங்கள் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதிக்கக் கோரியும், அவதூறாக பேசியதற்காக தங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும், ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் டெய்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக ஆதாரம் இல்லாமல் பேச ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதித்திருந்தார். இதையடுத்து தனக்கு எதிரான தனியார் நிறுவனங்களின் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என். சேஷசாயி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்புக்கும் இடையே சமசரம் ஏற்பட்டுவிட்டதால் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பால் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தாய்லாந்தில் யானை பாகன்களுக்கு பயிற்சி: தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details