தாம்பரம் பேருந்து நிலையம் அருகே பொது கழிப்பிடம் முன்பு ஆக்கிரமிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறாக இருப்பதாக தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில், தாம்பரம் நகராட்சி ஆணையர் கருப்பையா தலைமையிலான குழுவினர், தாம்பரம் காவல் உதவி ஆணையர் அசோகன் தலைமையிலான காவல் துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.
ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட நடைபாதை கடைகள் அகற்றம்!
சென்னை: தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட நடைபாதை கடைகளை நகராட்சி அலுவலர்கள் காவல் துறை பாதுகாப்புடன் அகற்றினர்.
ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட நடைபாதை கடைகள் அகற்றம்
தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சிறிய கடைகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் விதமாக இருந்ததால், தாம்பரம் நகராட்சி நிர்வாகம் காவல் துறை உதவியுடன் முழு கடைகளையும் அகற்றியது.
இதையும் படிங்க: ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை