தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவேந்திர குல வேளாளர் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - தேவேந்திர குல வேளாளர்

ஏழு உட்பிரிவுகளை சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Breaking News

By

Published : Apr 17, 2021, 6:08 PM IST

Updated : Apr 17, 2021, 6:14 PM IST

தமிழ்நாட்டில் தேவேந்திர குலத்தார், குடும்பர், பள்ளர், கடையர், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உள்பிரிவுகளைச் சேர்ந்த மக்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என ஒரே பெயரில் அழைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை நிறுத்தக் கோரியும், அரசிதழில் இதனை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவிடக் கோரி கரூரைச் சேர்ந்த கார்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு எம்பி கூட இல்லாத நிலையில், இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களின் அரசியல் லாபத்துக்காகவும் தேர்தல் ஆதாயத்துக்காகவும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ”தற்போதைய நிலையில் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல” எனக் கூறி தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:பாய்ஸ்க்கு அவர் நடிகர் மட்டுமில்லை: மிஸ் யூ மங்களம் சார்

Last Updated : Apr 17, 2021, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details