தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளுக்கு தனி வரிசைக்கோரிய மனு தள்ளுபடி - shiva temples in chennai

தமிழ்நாட்டில் சிவராத்திரியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கென தனி வரிசை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சிவராத்திரியையொட்டி மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளுக்கு தனி வரிசைக்கோரிய மனு தள்ளுபடி
சிவராத்திரியையொட்டி மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளுக்கு தனி வரிசைக்கோரிய மனு தள்ளுபடி

By

Published : Feb 15, 2023, 5:12 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிவனின் பஞ்சபூத தலங்களில் நான்கு தலங்களும், 276 பாடல் பெற்ற தலங்களும் தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த கோயில்களில் பொது தரிசனத்துக்கும், சிறப்பு தரிசனத்துக்கு என்று இரு வழிகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 18ஆம் தேதி சிவராத்திரி பண்டிகை தினத்தில் ஏராளமான பக்தர்கள் சிவாலயங்களில் தரிசனத்துக்கு வருவார்கள். பொது தரிசன வழியில் தரிசனம் செய்ய 5 மணி நேரம் வரை ஆகும் என்பதால், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவர்.

மேலும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பிட வசதிகள் இல்லை என்பதால், சிவாலயங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்துவதுடன், குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டப்பட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனுவில் உகந்ததாக இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (பிப். 14) அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களின் சார்பில் சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கேற்றபடி பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மீக, சமய நிகழ்ச்சிகளுடன் மகாசிவராத்திரி விழாவை வெகுசிறப்பாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆகமங்களை கண்டறியும் குழுவில் சத்தியவேல் முருகனார் நியமனத்திற்கு இடைக்காலத் தடை

ABOUT THE AUTHOR

...view details