சென்னை:அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடலூர் சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 76 புத்தகங்களை இலவசமாக வழங்க முடிவு செய்து அதனை பெற்றுக்கொள்ளுமாறு சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியாக கூறியுள்ளார்.
ஆனால், அரசியல் காரணங்களால் தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள சிறைத்துறை மறுத்துவிட்டதாகவும் மனுவில் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ''இந்த புத்தகங்களை நீங்கள் படித்திருக்கீர்களா? கைதிகளின் வாழ்க்கைக்கு இந்த புத்தகங்கள் உதவும் என எவ்வாறு கூறுகிறீர்கள்'' என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
விளம்பர நோக்கத்திற்காக இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும் முன், புத்தகங்கள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக்கூறி சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
'நீங்க படிச்சிருக்கீங்களா? - கைதிகளுக்கு புத்தகம் தர அனுமதிகேட்ட சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி
கடலூர் சிறைக்கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதிகோரி அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Dismissed Savukku sankar ask permission for distribute free book to inmates, MHC