தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - Chennai Latest News

சென்னை: தன் மீதான தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு :தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு :தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

By

Published : Jun 17, 2020, 3:37 PM IST

திருச்செந்தூர் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த வாக்காளர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், அனிதா ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும், அதில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் அவர் தேர்தலில் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்

காலதாமதமாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தேர்தல் வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்து அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details