தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீசாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து

காவல்துறையினர் செய்த தவறுகளுக்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடும் அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Etv Bharatகாவல்துறை மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Etv Bharatகாவல்துறை மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Dec 23, 2022, 7:13 AM IST

கோவையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான சாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "லாக்கப் மரணம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், சிறு தவறுகளுக்காக காவல்துறையினர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கைவிடப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் அரசாணை வெளியிட்டுள்ளது. அவ்வாறு காவல்துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும். மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே, காவல்துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடும் அரசின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நேற்று (டிசம்பர் 22) பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் வந்த போது, அவர்கள் பணி தொடர்பான விவகாரங்களில் எவ்வாறு பொதுநல வழக்கு தொடர் முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும், விளம்பர நோக்கத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:உரிய காலத்தில் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தர உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details