தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடிக்கு செக்; உதவியாளருக்கு முன்பிணை மறுப்பு - எடப்பாடிக்கு செக்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவியாளருக்கு முன்பினை மறுப்பு
உதவியாளருக்கு முன்பினை மறுப்பு

By

Published : Nov 16, 2021, 10:58 PM IST

சென்னை: சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்.

அப்போது ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்சம் ரூபாயை புரோக்கர் செல்வகுமார் மூலமாக பெற்று மணி ஏமாற்றியுள்ளார்.

எடப்பாடிக்கு செக்

இது தொடர்பாக தமிழ்செல்வன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மணி மீது இரண்டு பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்பினை கேட்டு எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உதவியாளருக்கு முன்பிணை மறுப்பு

இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறையினர் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், பணமோசடி செய்த மணி மீது மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்பதால் முன்பினை வழங்கக்கூடாது என்று தெரிவித்தார்

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'சூர்யாவை விமர்சிப்பது எந்தவகையிலும் நியாயம் இல்லை'

ABOUT THE AUTHOR

...view details