தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - பொது விநியோகத் திட்டத்துக்கான பருப்பு, பாமாயில் கொள்முதல்

சென்னை: பொது விநியோகத் திட்டத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

By

Published : May 31, 2021, 7:17 PM IST

Updated : May 31, 2021, 8:07 PM IST

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் துவரம் பருப்பு, பாமாயில் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வெளியிட்டது. இந்த டெண்டருக்குத் தடை விதிக்கக்கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், முந்தைய நிபந்தனைகளைப் பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய நிபந்தனைகளின்படி, டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கடைசி 3 ஆண்டுகளில் 71 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் (Turnover) கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் என விற்றுமுதல் செய்திருந்தால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை, அரசின் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக்கோரி அரசுத்தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மே.31) பட்டியலிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரா் மணிகண்டன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அரசின் மேல்முறையீட்டு மனுவையும் முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாக இதுவரை புகார்கள் இல்லை - உயர் நீதிமன்றம்!

Last Updated : May 31, 2021, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details