சென்னை:சமீப காலமாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் சிலர் பணியின் பொழுது மது போதையில் இருப்பதாக புகார் பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். மது அருந்திய நிலையில் பணிபுரிவதால் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் அவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது.
எனவே, அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணி புரியக்கூடாது. அவ்வாறு பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு மிக அதிக அளவில் உள்ளது.