வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கரோனாவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். வெளிமாநில நிகழ்ச்சிக்குச் சென்று வந்தவர்கள் உடனடியாக அரசு அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இறைச்சி, மளிகைக் கடைகளில் கூட்டம் சேர்ந்தால், அரசு கூறிய வசதிகளை பின்பற்றாமல் இருந்தால் பேரிடர் மேலாண்மை சட்டம் மூலம் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். ஊர்களுக்குச் செல்லும் மக்கள் சென்னை மாநகராட்சியிடம் சான்றிதழ் பெறுவதில் குளறுபடியிருப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பேசி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வீடு, காலனி என அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருள்கள் தடைஇல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு டெல்லி போராட்டத்தில் கலந்துக்கொண்டு வீடு திரும்பியவர்கள் பட்டியல் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு பணி நிமித்தமாக குடியேறியுள்ள தொழிலாளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் தொழிலாளர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர்கள் வீட்டில் இருந்தாலும் அவர்கள் குழந்தைகளுடன் விளையாடுவதை தவிர்த்து தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: விதிமுறைகளை மீறிய வெளிநாட்டினர்
!