தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாய்ந்தோடும் காவிரி: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை - mettur dam

சென்னை:  மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்தியகோபால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சத்தியகோபால்

By

Published : Aug 13, 2019, 8:30 PM IST

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணையிலிருந்து 2.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக இன்று காலை முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகை மாவட்ட ஆட்சியர்களுக்கு, பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்தியகோபால் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் 'நீர் இருப்பை பற்றி அவ்வப்போது மக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க கூடாது, தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க வேண்டும், உள்ளூர் மீட்பு குழு, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி பெற்ற காவலர்கள் ஆகியோர் தொடர்ந்து காவிரி வடிநில பகுதிகளை கண்காணிக்க வேண்டும், கால்நடைகளை பத்திரமான இடத்தில் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்' என தெரிவித்துயுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details