மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்களை உருவாக்க வகை செய்யும் வகையில் புதிய விதிகளை வகுக்க முடிவு செய்த மத்திய அரசு, இதுதொடர்பாக வரைவு விதிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பதால், இதை விளம்பரப்படுத்தி, பொதுமக்களின் கருத்துக்களை கேட்க உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரைவு விதிகள் இணையதளத்தில் மட்டுமே, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த விதிகள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு அக்டோபர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் தொடர்பான வழக்கு - வரைவு விதிகள்
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான வரைவு விதிகள் குறித்து விளம்பரங்கள் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்துக்கள் கேட்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் தொடர்பான வழக்கு மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் தொடர்பான வழக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13298797-1063-13298797-1633692243588.jpg)
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் தொடர்பான வழக்கு
இதையும் படிங்க : கட்டப்பையில் வைத்து பெண் குழந்தை கடத்தல் - சிசிடிவியை வைத்து விசாரணை