சென்னை:பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத்தேர்வினை எழுதுவதற்கு 7,600 பள்ளிகளில் இருந்து 8.80 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு 3169 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வினை எழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர், விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான ஹால்டிக்கெட் தயார் நிலையில் உள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்த பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை முதல் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிட உள்ளது.