சென்னை:பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக அவர் நடக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே தனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் இயக்குநர் விக்ரமன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனையடுத்து இன்று (அக்.30) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, நரம்பியல் துறைத் தலைவர் எம்.சங்கர், எலும்பியல் துறைத் தலைவர் தொல்காப்பியன் உள்ளிட்டவர்கள் அடங்கிய மருத்துவ குழு, இயக்குநர் விக்ரமனின் மனைவியை நேரில் சென்று பரிசோதித்தனர்.
இது குறித்து, இயக்குநர் விக்ரமன் கூறுகையில், "எனது மனைவி 5 வருடகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது முதுகில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக நடக்க முடியாமல் போனது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரிடம் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதனை பார்த்த முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன் பின்னர் 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் எனது இல்லத்திற்கு வந்து, எனது மனைவியை பரிசோதனை செய்துள்ளார்கள்.