சென்னை: சென்னையில் நடைபெற்ற சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய வெற்றிமாறன், "நம்முடைய சொந்த பணத்தை செலவு செய்து மது அருந்துகிறோம். பெண்கள் பிறர் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சாப்பாடு வீண் ஆகிறது என்றால் கூட அதை வீணாக்கக்கூடாது என்று அதைப் பெண்கள் சாப்பிட்டுவிடுவார்கள். நாம் எந்த அளவுக்கு உடல் தகுதியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு அது வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கும். எந்த அளவிற்கு உடலுக்கு காய்கறிகளை சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு அது உடலுக்கு நல்லது.
வடசென்னை (Vada Chennai) திரைப்படத்தின் 2ம் பாகம் கண்டிப்பாக வரும். வேறு இரு திரைப்படத்தின் வேலை இருக்கிறது. அது முடிந்ததும் கண்டிப்பாக எடுக்கப்படும். அசுரன் (Asuran) படம் எடுக்கும்போதே, சூரியுடன் (Soori) தான் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அஜினபுரி என்ற நாவலை படமாக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதற்கு லொகேஷன் பார்த்துவிட்டு வந்தோம். ஆனால், அதற்குள் லாக்டவுன் போட்டுவிட்டார்கள். கைதிகள் என்ற ஜெயமோகன் புத்தகத்தை படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அந்த புத்தகத்தின் காப்புரிமை வேறு ஒருவர் வாங்கிவிட்டார்.
வாடிவாசல் (Vaadivaasal) திரைப்படத்திற்கு ஒரு ரோபோட்டிக் காளையை செய்து வருகிறோம். சூர்யா (Suriya) வளர்க்கும் காளையை போன்று ஸ்கேன் செய்து ஒரு ரோபோவை உருவாக்கி வருகிறோம். நானும் விஜய்யும் (Vijay) படம் பண்ணுவது தொடர்பாக பலமுறை பேசிதான் வருகிறோம். அவர் என் படத்தில் நடிக்கத் தயாராகத் தான் உள்ளார். என்னுடய மீதிப் படங்கள் எல்லாம் முடித்துவிட்டு கண்டிப்பாக அவரிடம் கதை சொல்வேன். அவருக்குப் பிடித்ததால் கண்டிப்பாக இருவரும் இணைவோம்'' என்றார்.