கருணாநிதியின் சாதனை சுவடுகள் என்றும் மறையாது - இயக்குநர் சுசீந்திரன் - கருணாநிதியின் பிறந்தநாள்
சென்னை: கருணாநிதியின் பிறந்தநாளுக்கு தான் எழுதிய வாழ்த்து மடலில், தமிழுக்கும் தமிழர்களுக்கும் நீங்கள் செய்த நற்தொண்டுகளை என்றும் நினைவில் கொள்வோம் என இயக்குநர் சுசீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சுசீந்திரன்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த தினமான இன்று (ஜூன்3), திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் அவர் நினைவாக ஒரு வாழ்த்து மடலை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழர்களின் உண்மையான தலைவர் கலைஞர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று... தமிழன் இந்த பூமியில் வாழும்வரை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் சாதனை சுவடுகள் என்றும் மறையாது.
நீங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த நற்தொண்டுகளை என்றும் நினைவில் கொள்வோம்.. உங்களை வணங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
Last Updated : Jun 3, 2020, 1:09 PM IST