சென்னை:இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ’சட்டப்படி குற்றம்’ திரைப்படத்தின் விளம்பரச்செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததையடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தை விளம்பர பெய்ய சரவணன் என்பவரின் தமிழ்நாடு விஷூவல் சிசிடிவி அட்வர்டைஸ்மென்ட் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார். ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்காக ரூ.40,000 முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால், படம் வெளியாகி தோல்வியடைந்ததால் மீதி பணத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தரமறுத்துள்ளார். இதுகுறித்து கடந்த 2014ஆம் ஆண்டு சரவணன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.