சென்னை:நாள்தோறும் மரணச் செய்திகளை நாம் கேட்டவண்ணமே உள்ளோம். சிலர் தங்களின் அன்புக்குரியவர்களை இந்தக் கரோனா தொற்றுக்கு இழந்திருக்கிறார்கள். முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் பலரும் கரோனா தொற்று எவ்வளவு ஆபத்தானது என்று புரியமறுக்கிறார்கள்.
ஊரடங்கில் வீட்டிலேயே இருப்பதன் மூலம் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் எனப் பலரும் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில் இயக்குநர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
தினமும் தெரிந்த முகங்களின் மரணம்!
நேரில் பார்க்க முடியாத அவலம்!
கடந்த வந்த காலங்களில் இதுவே கொடூரமான காலம்!